சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |
புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குவதில் சிறந்து விளங்கும் விஜய் டி.வி., ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள நேயர்களுக்காக மகான்களை வாழ்க்கையை சித்தரிக்கும் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. இதுவரை ஒளிபப்பாகி வந்த ஸ்ரீராகவேந்திரர் தொடர் முடிந்ததைத் தொடர்ந்து, சீரடி சாய் பாபாவின் வாழ்க்கைத் தொடரை விஜய் டி.வி., ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்துள்ளது. பாபாவின் அவதாரம் எப்படி ஏற்பட்டது என்பதில் தொடங்கி, இன்று பாபாவை எப்படி பக்தர்கள் வணங்குகிறார்கள்; அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை உள்ளிட்ட விளக்கங்களோடு கதை சொல்லப்படுகிறது. பாபாவின் பிறப்பு முதல் அவர் தன் பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்திய மகிமைகள் வரை எல்லாம் இடம் பெறுகிறது. இந்த தொடரில் பாபா வேடம் ஏற்று நடிக்கிறார் பிரபல பாடகர் எஸ்.என்.சுரேந்தர். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30க்கு ஷீரடி பாபாவின் தொடரை கண்டு ரசிக்கலாம்.




